Posts

Image
மூணாறு குறிப்புகள் அது வியாழக்கிழமை. முதன்முறையாக அலுவலக நண்பர்களுடன் சேர்ந்து நெடும்பயணம். மூணாறு செல்லும் ஆர்வத்தில் டிராவல் பைகளுடன் காத்திருந்தார்கள். வாகனமும். ஓட்டுநரும் அவசரப்பட்டுக்கொண்டிருந்தார். பத்திரிகையை அச்சுக்கு அனுப்பும் பிஸியான நாள். இழுத்துக்கொண்டே இருந்த வேலை ஒருவழியாக இரவு பத்தரை மணிக்கு முடிவுக்கு வந்திருந்தது. அடுத்த நொடியே பயணம் தொடங்கியது. புதிய தலைமுறை ஆசிரியர் எம்.பி.உதயசூரியன், புதிய தலைமுறை கல்வி ஆசிரியர் பெ. கருணாகரன் இணைந்து வழங்கிய மூணாறு சிற்றுலா. தென்மேற்குப் பருவக்காற்று தேனிப் பக்கம் வீசும்போது அடிக்கும் சாரலை அனுபவித்து வரலாம் என்ற ஆசை. கிண்டியைத் தொடும்போதே உற்சாகம் தொற்றிக்கொள்ள புகைப்படக் கலைஞன் கோகுல், மஸ்தான் இருவரும் நடனமாடத் தொடங்கி விட்டார்கள். டான்ஸ் க்ளாஸ் அனுபவம் கொண்டவர்கள். மூணாறில் இருந்து திரும்பும்வரை கோகுல் ஆட்டத்தை நிறுத்தவில்லை. தாம்பரத்தில் ஏறிய கணேசன், கடைசி சீட்டைப் பிடித்துக்கொண்டு அடம்பிடித்தார். "புதுப் பாட்டா போடுங்க சார்..." என்று உரிமை முழக்கமிட்டார் சர்ப்பனா. இவள் பாரதி ஹம் செய்தார். எண்பதுகளின் மெலடிகளை அமலன்...